top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT SECOND YEAR ANNIVERSARY WEB CONFERENCE

தோழ - க அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு நிறைவு விழா வலை - காணொளி 11th July 2021 / ஜூலை 11, 2021 On account of celebrating the completion of two consecutive years in the field of Social Work, Thozhargalin Karam Charitable Trust organised a Web Conference, with an idea of inspiring Volunteers who have social interest. For this regard, Mr. Odandhurai Shanmugam, Ex. Panchayat President, Odandhurai Village, Mettupalayam was invited as the Chief Guest to address the Conference. The Chief Guest given his esteemed presence in the Conference yesterday (11.07.2021) and addressed the gathering about the service he rendered, his achievements, his successful projects and his words of guidance to the upcoming generation. His words were really inspiring. Nearly 100 people have participated in the Conference and benefitted by the Guest's thoughts. We extend our gratitude to the Chief Guest, technical support team, MoC and QandA Team and People Management Team, the members and The Trustees who provided their guidance to execute the event as a good endeavour. ~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• தோழர்களின் கரம் அறக்கட்டளை தனது சமூக சேவைப் பணியில் இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததை முன்னிட்டு, ஒரு வலை - காணொளி ஒழுங்கு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திரு. ஓடந்துறை சண்முகம் ஐயா (முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், ஓடந்துறை கிராமம்) அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று நடந்தேறிய இந்த வலை - காணொளியில், சுமார் நூறு பேர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஐயா, தமது இதுவரையிலான சமூக செயல்பாடுகள், சாதனைகள், கிராமத்திற்கு செய்த ஆக்கபூர்வமான புதிய திட்டங்கள் மற்றும் வருங்கால மாணவர்களுக்கு சமூகத்தை நல்வழிப்படுத்தவேண்டிய பொறுப்பு மற்றும் சாத்தியக்கூறுகள் பற்றி பேசினார். இது அனைவருக்கும் பெரும் பயன் தரக்கூடியதும் ஊக்கப் படுத்துவதுமாய் அமைந்தது. இந்நிகழ்வு நிறைவானதாய் அமையக் காரணமாய் இருந்த திரு. ஓடந்துறை சண்முகம் ஐயா அவர்கள், தொழில்நுட்பக் குழு, ஒருங்கமைவுக் குழு, கேள்வி பதில் குழு, மக்கள் மேலாண்மைக் குழு மற்றும் இவர்களை வழிநடத்திய தோழ-க அறக்கட்டளை அறங்காவலர்கள், உறுப்பினர்கள் முத்தாய்ப்பாக காணொளியில் பங்குகொண்ட சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் தோழ-க அறக்கட்டளை, தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


48 views0 comments

Comments


bottom of page