top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT - SANITARY NAPKINS AWARENESS PROVISION TO THE TRIBAL WOMEN

TKCT - SANITARY NAPKINS AWARENESS PROVISION TO THE TRIBAL WOMEN / தோழ - க அறக்கட்டளையின் மலைவாழ் பெண்களுக்கான சுகாதார குட்டை விழிப்புணர்வு மற்றும் விநியோக நிகழ்வு


19th June 2022 / ஜூன் 19, 2022


Thozhargalin Karam Charitable Trust has planned to do an event for the tribal community that will benefit them for their betterment. Thus, through a field survey, the TKCT Team observed that, the Tribal women have no awareness about Sanitary Napkins and thus they are having many menstrual discomforts and problems


So the trust decided to educate them about napkins usage and benefits and to provide them an eco-friendly sanitary napkins that will not harm their health and assure their hygiene.


Hence, Thozhargalin Karam Charitable Trust collaged with Green Delight Innovations private limited (BLISS) who have been producing Sanitary Napkins our of spinach stem and bamboo. Trust bought over 260 pieces of napkins from them and distributed them to the tribal women of Kondanoor, Kondanoor Pudur, Kandivali and Panapalli villages in Anaikatti Village, Coimbatore.


They were completely educated about the usage, benefits, disposal methods by our executives of TKCT. The product has been carried to them post the experimental observation of our executives.


TKCT whole heartedly thanks the Green Delight Innovations for this innovative eco-friendly practice and for having combined with us by providing the products as a partial sponsor. TKCT remains incredibly grateful to Mr. Joshua, the Social Worker, who have been working for the betterment and upliftment of the Tribal community pf Anaikatti group of villages.


TKCT thanks all the volunteers and contributors of TKCT for carrying this event as a good endeavour.


•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~


தோழர்களின் கரம் அறக்கட்டளை, இம்மாத நிகழ்வாக, மலைவாழ் மக்களின் நலன் சார்ந்த நிகழ்வை முன்னெடுக்க எண்ணியது. இதனைச் சார்ந்த கள ஆய்வு மூலம், அங்குள்ள மலைவாழ் பெண்டிர் சுகாதாரக் குட்டைகள் பற்றிய விழிப்புணர்வு அற்று இருப்பதும், அதனால் உடல்ரீதியான இன்னல்களை சந்திப்பதையும் அறிய நேர்ந்தது.


எனவே, இவர்களுக்கு, சுகாதாரக் குட்டைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றை இலவசமாய் வழங்கி, அதன் பயன்பாட்டை ஊக்கப்படுத்தவும் தோழ - க அறக்கட்டளை முடிவெடுத்தது.


இதனைத் தொடர்ந்து, கிரீன் டிலைட் இன்னோவேசன்ஸ் (Green Delight Innovations private limited) உடன் இணைந்து, அவர்கள் தயாரிக்கும் புளிச்ச கீரை தண்டு மற்றும் மூங்கில் கொண்டு உருவாக்கப்பட்ட சுகாதாரக் குட்டைகளை வாங்கி, மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்காக வழங்க முன்வந்தது.


எனவே, இன்று (19.06.2022) கோவை ஆனைக்கட்டி பகுதியில் உள்ள மலைகிராமங்களான கொண்டனூர், கொண்டனூர் புதூர், கண்டி வழி மற்றும் பனபள்ளி போன்றவற்றில் உள்ள மலைவாழ் பெண்களுக்கு சுமார் 260 சுகாதாரக் குட்டைகளை, அதன் பயன்பாடு, நன்மைகள் மற்றும் கழிவு மேலாண்மை போன்றவற்றை அவர்களுக்கு அறியபடுத்தியதன் பின்னர், வழங்கப்பட்டது.


இக்குட்டைகள், தோழ - க அறக்கட்டளை உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்டு, அவற்றின் நன்மைகளை உறுதிசெய்த பின்னரே இந்நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.


இந்நிகழ்வு நிகழ உதவிய கிரீன் டிலைட் இன்னோவேசன்ஸ் இந்த சுகாதாரக் குட்டைகளை பகுதி - நல்கை அடிப்படையில் அளித்ததற்காக, தோழ - க அறக்கட்டளை மனம்நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


மேலும் இந்நிகழ்வு நிகழ பெரும் காரணமாக இருந்த சமூக செயற்பாட்டாளர் உயர்திரு. ஜோஷ்வா அய்யா அவர்களுக்கு தோழ - க அறக்கட்டளை உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


இந்த நிகழ்வுக்கு கொடையாற்றிய மற்றும் பங்கேற்ற தோழ - க அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் அறக்கட்டளை நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


89 views0 comments

Comments


bottom of page