top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT - RICE DONATION

TKCT - RICE DONATION / தோழ-க அறக்கட்டளை உதவிப்பணி


14th April 2022 / 14 ஏப்ரல் 2022


On knowing our activities towards the society, Mr. S. Praveen Kumar, residing at Sowripalayam had approached our Trust and shared nearly 40 Kg of rice to donate to the needy. Mr. Nithish Kumar, CM Member of TKCT Forwarded this to our executive team to had the rice to the right beneficiaries.


Hence our TKCT Team Executive Ms. Sandhiya along with her colleague reached to the beneficiaries who vend dolls and staying on the roadside near Le Meridien Hotel, Neelambur and donated them the 40 kg of rice for the 8 families residing over there with which they could tackle for a month.


TKCT wholeheartedly thank Mr. Praveen Kumar for choosing TKCT to carry out this good endeavour, Mr. Nithish Kumar for regulating the event by forwarding to the executive Team and TKCT Executive Ms. Sandhiya and her colleague for executing the event successfully at the time of need.


•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~


சமூக வலைதளங்கள் மூலம் தோழர்களின் கரம் அறக்கட்டளையின் சமூகப் பணிகளை அறிந்த கோவை சௌரிபாளையத்தைச் சேர்ந்த திரு. பிரவீன் குமார் அவர்கள் சுமார் 40 கிலோ அரிசியை பயனாளர்களுக்கு வழங்குமாறு தோழ-க அறக்கட்டளையிடம் அளித்தார். அறக்கட்டளை உறுப்பினரான நண்பர். நிதீஷ் குமார் இதனை திரு. பிரவீன் குமார் அவர்களிடமிருந்து பெற்று அறக்கட்டளை பணிக்குழுவிடம் சேர்த்தார்.


இதைத்தொடர்ந்து, தோழ-க அறக்கட்டளை நிர்வாகி தோழி. சந்தியா மற்றும் அவர் நண்பர் ஒருவரும் கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள லீ மெரிடியன் விடுதியின் அருகில் சாலையோரம் வசிக்கும் பொம்மை வியாபாரம் செய்யும் சுமார் 8 குடும்பங்களுக்கு இந்த உதவிப்பொருட்களை வழங்கினர். இப்பொருட்கள் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு உதவியாக அமையும்.


இந்த உதவிப்பணியை மேற்கொள்ள தோழர்களின் கரம் அறக்கட்டளையை தேர்வு செய்த திரு. பிரவீன் குமார் அவர்களுக்கும், பணிக்குழுவிடம் உதவிப்பொருட்களை முறையாக கொண்டுசேர்த்த நண்பர். நிதீஷ் குமார் அவர்களுக்கும், உதவிப்பணியை உரிய நேரத்தில் மேற்கொண்ட நிர்வாகி தோழி. சந்தியா மற்றும் அவர் நண்பருக்கும் தோழ-க அறக்கட்டளை தம் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.


17 views0 comments

Comentários


bottom of page