top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT - ORGANIC SANITARY NAPKINS PROVISION TO TRIBAL WOMEN


12th March 2023 / மார்ச் 12, 2023


As a part of the women's welfare initiative, Thozhargalin Karam Charitable trust has been providing Organic Sanitary Napkins to the Tribal women of Aanakatti villages.


As the next phase of the same, TKCT provided nearly 80 packs which contains 300 of Sanitary Napkins to the villages in Aanakatti reserved forests such as Sembakkarai, Sendhakkadu and Dhoomanoor and surrounding villages. The pads that are provided were organic pads manufactured with Aloevera. The women were also given education and awareness about standard usage methods and disposal process.


TKCT solemnly thanks Mr. Joshua, the Social Worker who has been actively taking initiatives in raising the standards of the Tribal people in Anaikatti region, for helping TKCT consistently to take forward this initiative a successful and fruitful one.


TKCT wholeheartedly appreciates and thanks Imayam Foundation for providing these Organic Sanitary Napkins, produced by them.


TKCT wholeheartedly thanks Mrs. Latha Sundaram from Aram Foundation, for helping TKCT to collaborate with Imayam foundation and to take this motive actively.


TKCT remains thankful to the members and followers of trust for supporting the initiative through their contribution and co-operation


•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~


தோழர்களின் கரம் அறக்கட்டளையின் பெண்கள் நல்வாழ்வு முன்னெடுப்பி்ன் மூலமாக, கோவை ஆனைக்கட்டி பகுதியில் உள்ள மலைகிராமங்களில் வாழும் பழங்குடியினப் பெண்களுக்கு இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சுகாதாரக் குட்டைகள் வழங்கும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதன் தொடர்ச்சியாக, மார்ச் 12 அன்று ஆனைக்கட்டி பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளில் அமைந்துள்ள மூன்று கிராமங்களான செம்பக்கரை, செந்தக்காடு மற்றும் தூமனூர் மற்றும் ஆனைக்கட்டி சுற்றுப்பகுதியில் அமைந்துள்ள மலைக்கிராமங்களில் உள்ள பெண்களும் பயனுறும் வகையில், அவர்களுக்கு, இயற்கையாக கற்றாழை கொண்டு தயாரிக்கப்பட்ட சுகாதாரக் குட்டைகள் சுமார் 300 குட்டைகள் கொண்ட 80 தொகுப்புகள் வழங்கப்பட்டன.


மேலும் அவற்றின் பயன்பாடு குறித்தும், அவற்றின் கழிவு மேலாண்மை குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


இது அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும் வகையில் உதவிய முன்னெடுப்பாக அமைந்தது அங்குள்ள பெண்களுக்கு மிகுந்த நிறைவைத் தந்தது.


இந்த இயற்கை முறையில் தயாரிக்கப் பட்ட சுகாதாரக் குட்டைகளை வழங்க முன்வந்த இமயம் அமைப்புக்கு தோழ-க அறக்கட்டளை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


இந்நிகழ்வு அனைத்து சுழற்சிகளிலும் நல்ல முறையில் நடக்கக் காரணமாய் இருந்த சமூக செயற்பாட்டாளர் திரு. ஜோஷுவா அவர்களுக்கு தோழ-க அறக்கட்டளை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


இமயம் அமைப்புடன் இணைந்து செயல்பட பேருதவி புரிந்த அறம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திருமதி. லதா சுந்தரம் அவர்களுக்கு தோழ-க அறக்கட்டளை உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


மேலும் இந்த முன்னெடுப்புக்கு ஆதரவு மற்றும் நன்கொடை மூலமாக உதவிய தோழ-க அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தோழ-க அறக்கட்டளை மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது



29 views0 comments

コメント


bottom of page