top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT Library Installation - Madurai / தோழ-க அறக்கட்டளை நூலகம் அமைக்கும் உதவிப்பணி - மதுரை

Updated: Aug 29, 2022

27th August 2022 / ஆகஸ்ட் 27, 2022


By following us in social media and seeing all the activities we done, the headmaster of Dr. T. Thirugnanam Primary School Primary School from Madurai District approached us to donate books for setting up class-wise library for their students studying from 1st grade to 5th grade in the School, situated at Keelachandhaipetai, Madurai.


TKCT communicated with that School Headmaster Mr. Saravanan regarding the help they needed and proceeded for confirmation post the analysis of positive outcome.


Hence, on 27th August 2022, TKCT Team reached Dr. T. Thirugnanam Primary School, Keelachandhaipetai, Madurai, along with the books that to be donated. Nearly 400 general tamil and english books were donated to the school that consists of stories, general knowledge, biography, etc.,..


The School Headmaster, Teachers and students felt good for this act of service from TKCT.


TKCT Managing Trustee Mr. Yokendran, TKCT Chief Executives Ms. Sandhiya, Ms. Ramya, Mr. Shyamjith and Mr. Abdur Rahman, TKCT Executives Ms. Priyadharshini and Ms. Priyanka had carried the event and did the needful.


TKCT shows honor to the School Headmaster and the school administration for believing TKCT to do good to their School.


TKCT wholeheartedly thanks the event participants to have carried the event successfully, The Chief Executives, Executives Members and Volunteers who are following TKCT for supporting the event through their valuable contributions.


*Cultivation of Mind should be the Ultimate Aim of Human Existence - Dr. B. R. Ambedkar*


•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

சமூக வலைதளங்கள் மூலம் தோழர்களின் கரம் அறக்கட்டளையின் சேவைப்பணிகளை அறிந்துகொண்டு, மதுரை மாவட்டம் கீழச்சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் டாக்டர். T. திருஞானம் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சரவணன் அவர்கள் தோழர்களின் கரம் அறக்கட்டளையை அணுகி அங்கு பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வகுப்பு வாரி நூலகம் அமைக்கும் விதமாக புத்தகங்களை வழங்கிட உதவி கோரினார்.


அவருக்கு தொடர்புகொண்டு உதவி வழங்கலின் தேவையை அறிந்து கொண்ட தோழ-க அறக்கட்டளை, இந்நிகழ்வினை முன்னெடுக்க எண்ணியது.


இதன் நிமித்தமாக ஆகஸ்ட் 27 அன்று நம் அறக்கட்டளை உதவிக்குழு, உரிய உதவிப்பொருட்களுடன் மதுரை மாவட்டம் கீழச்சந்தைப்பேட்டை பகுதியில் டாக்டர். T. திருஞானம் ஆரம்பப் பள்ளியை அடைந்து, சுமார் 400 தமிழ் மற்றும் ஆங்கில கதைகள், வரலாறுகள், பொது அறிவு, சுயசரிதை போன்றவை உள்ளடக்கிய புத்தகங்களை பள்ளிக்கு வழங்கியது.


இந்த உதவிப்பணியால் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


தோழ-க அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் நண்பர். யோகேந்திரன், தலைமை நிர்வாகிகள் தோழி. சந்தியா, தோழி. ரம்யா, நண்பர். ஷியாம்ஜித், நண்பர். அப்துர் ரஹ்மான், நிர்வாகிகள் தோழி.

பிரியதர்ஷினி மற்றும் தோழி. பிரியங்கா போன்றோர் இந்நிகழ்வை எடுத்துச் சென்று உதவிப்பணிகளை மேற்கொண்டனர்.


இந்த உதவிப்பணியை மேற்கொண்ட தோழ-க அறக்கட்டளை உதவிக்குழுவிற்கும், உரிய உதவிகள் மற்றும் நன்கொடைகள் வழங்கிய அறக்கட்டளை அறங்காவலர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும், மேலும் நம் அறக்கட்டளையை அறிந்து உதவிய சமூக ஆர்வலர்களுக்கும் அறக்கட்டளை உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


*தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார் - வள்ளுவம் - 104*




46 views0 comments

Comments


bottom of page