top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT Library Installation - Ettimadai / தோழ-க அறக்கட்டளை நூலகம் அமைக்கும் உதவிப்பணி - எட்டிமடை


19th Aug 2023 / ஆகஸ்ட் 19, 2023


Thozhargalin Karan Charitable Trust has been helping orphanages and government schools in the field of education and literacy by installing a library and donating books, through its one of the initiatives "Karkkai Nandrae".

Thus the trust identified a government high school in Ettimadai, Coimbatore which had a need for a library and thus planned to install a library and donate books to the school.


Hence, on 19th August 2023, TKCT Team reached the Government High School located in Ettimadai, Coimbatore and donated a library rack and nearly 500 books to the school administration.


The School Headmistress and students felt good for this act of service from TKCT.


Under the planning and coordination of TKCT Trustees Mrs. Sandhiya and Ms. Ramya, the team of TKCT reached the school and did the needful.


TKCT wholeheartedly thanks the event participants to have carried the event successfully and the Executives, Members and Volunteers who are following TKCT for supporting the event through their valuable contributions.


*Cultivation of Mind should be the Ultimate Aim of Human Existence - Dr. B. R. Ambedkar*


•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•



தோழர்களின் கரம் அறக்கட்டளை கல்விப்பணி மற்றும் முன்னேற்றத்திற்காக கற்கை நன்றே எனும் தனது முன்னெடுப்பின் வாயிலாக, அரசுப் பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் மாணவர்கள் பயனுறும் வகையில் நூலகம் அமைத்தல் மற்றும் புத்தகங்கள் வழங்கல் போன்ற உதவிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.


இதன் தொடர்ச்சியாக, 19.08.23 அன்று தோழர்களின் கரம் அறக்கட்டளையின் மூலம் கோவை எட்டிமடைப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நூலகத்தின் தேவை இருப்பதை உறுதி செய்து, அப்பள்ளிக்கு ஒரு நூலக அலமாரி மற்றும் சுமார் 500 புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மேலும் நூலகத்தின் தேவை மற்றும் புத்தக வாசிப்பின் அவசியம் குறித்தும் அப்பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


இந்நிகழ்வு அங்குள்ள மாணவர்களுக்கு மிகுந்த நிறைவைத் தந்தது.


தோழ-க அறக்கட்டளையின் அறங்காவலர்கள் தோழி. சந்தியா மற்றும் தோழி. ரம்யா அவர்களது திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பின் மூலம் இந்நிகழ்வு அறக்கட்டளையின் செயல்பாட்டு அணியினரால் சீராய் மேற்கொள்ளப்பட்டது.


இந்நிகழ்வு ஒருங்கே அமையக் காரணமாக இருந்த தோழ-க அறக்கட்டளையின் உறுப்பினர்கள், நிர்வாகிகள், தலைமை நிர்வாகிகள், அறங்காவலர்கள் மற்றும் ஆதரவும் பங்களிப்பும் நல்கிய தன்னார்வலர்களுக்கு அறக்கட்டளை தம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


*தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார் - வள்ளுவம் - 104*

62 views0 comments

Comments


bottom of page