top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT Library Installation - Dindigul

TKCT Library Installation - Dindigul / தோழ-க அறக்கட்டளை நூலகம் அமைக்கும் உதவிப்பணி - திண்டுக்கல் 24th April 2022 / ஏப்ரல் 24, 2022 By following us in Facebook and seeing all the activities we done, a Government Girls Higher Secondary School Headmaster from Dindigul District approached us to do a library set-up event in their School in Naththam, Dindigul. They especially needed the Examination Preparation Books for their students who are from 9th to 12th standard along with the general tamil and english books. After a proper field visit done directly in the school, TKCT decided to help them donating a library rack and the exam preparation and the general tamil and english books of various useful genre. Hence, on 24th April 2022, TKCT Team reached the Government Girls Higher Secondary School located in Naththam, Dindigul along with the books and library rack and installed the same. Nearly 400 books that contained exam preparation books and general tamil and english books were donated to the school along with a library rack. The library contains various exam preparation books thats for TNPSC, SSC, POLICE, BANKING, RRB, NEET and many tamil and english books of various useful genre. The School Headmaster, Teachers and students felt good for this act of service from TKCT. TKCT Managing Trustee Mr. Yokendran, TKCT Executives Ms. Ramya and Mr. Abdur Rahman, TKCT members Ms. Priya and Mr. Venkatesh carried the event and did the needful. TKCT shows honor to the School Headmaster Mr. P. Jesudhasan and the school administration for believing the TKCT to go good to their School. TKCT wholeheartedly thanks the event participants to have carried the event successfully, The Executives, Members and Volunteers who are following TKCT for supporting the event through their valuable contributions. *Cultivation of Mind should be the Ultimate Aim of Human Existence - Dr. B. R. Ambedkar* •~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• சமூக வலைதளங்கள் மூலம் தோழர்களின் கரம் அறக்கட்டளையின் சேவைப்பணிகளை அறிந்துகொண்டு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. பி. ஜேசுதாசன் அவர்கள் அறக்கட்டளையை அணுகி ஒரு நூலகம் அமைத்துத் தரவும், அரசு தேர்வுகளுக்கு தயார் செய்ய உதவும் புத்தகங்கள் மற்றும் இதர புத்தகங்கள் வழங்கவும் உதவி கோரினார். பள்ளிக்கு நேரில் சென்று உதவி வழங்கலின் தேவையை அறிந்து கொண்ட தோழ-க அறக்கட்டளை, இந்நிகழ்வினை முன்னெடுக்க எண்ணியது. இதன் நிமித்தமாக ஏப்ரல் 24 அன்று நம் அறக்கட்டளை உதவிக்குழு, உரிய உதவிப்பொருட்களுடன் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை அடைந்து, ஒரு நூலக அலமாரியும் சுமார் 400 அரசு தேர்வுகளுக்கு தயார் செய்ய உதவும் புத்தகங்கள் மற்றும் இதர புத்தகங்கள் போன்றவற்றை பள்ளிக்கு அமைத்துக் கொடுத்தது. இந்நூலக அமைப்பில் TNPSC, SSC, POLICE, BANKING, RRB, NEET போன்ற அரசுத் தேர்வுகளுக்கு உதவும் புத்தகங்களும், பல்வேறு தலைப்புகளில் கீழ் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களும் அடங்கும். இந்த உதவிப்பணியால் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தோழ-க அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் நண்பர். யோகேந்திரன், நிர்வாகிகள் தோழி. ரம்யா, நண்பர். அப்துர் ரஹ்மான், உறுப்பினர்கள் தோழி. பிரியா மற்றும் நண்பர். வெங்கடேஷ் போன்றோர் இந்நிகழ்வை எடுத்துச் சென்று உதவிப்பணிகளை மேற்கொண்டனர். இந்த உதவிப்பணியை மேற்கொண்ட தோழ-க அறக்கட்டளை உதவிக்குழுவிற்கும், உரிய உதவிகள் மற்றும் நன்கொடைகள் வழங்கிய அறக்கட்டளை அறங்காவலர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும், மேலும் நம் அறக்கட்டளையை அறிந்து உதவிய சமூக ஆர்வலர்களுக்கும் அறக்கட்டளை உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. *தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் - வள்ளுவம் - 104*



49 views0 comments

Comments


bottom of page