top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT HELPS NIVAR CYCLONE AFFECTANTS / தோழர்களின் கரம் அறக்கட்டளை நிவர் புயல் பாதிப்பில் உதவி

27th November 2020


Chennai is one of the main cities which got severely affected by Nivar Cyclone. People living around the affected area have been moved to the Calamity Rescue Camps are facing issues for their minimal need.


As a part of helping them, Thozhargalin Karam Charitable Trust have taken initiative to provide biscuits for the families living there, which consists around 600 people, in the camp.


On behalf of TKCT, Volunteers Mr. Mounish and Mr. Vijay headed up to the camp spot arranged at Perungulaththoor Government School, Chennai and provided the biscuits to the needy with the permission and supervision of Revenue Officer and Camp Incharge Officer respectively.


TKCT pays respect to the selfless volunteers who helped us despite unfair situation and the officers who granted permission.


"Its not about what we gave or how much we gave; Its all about the help we carried at the right time of need"


27 நவம்பர் 2020


நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட முக்கிய நகரங்களில் சென்னையும் ஒன்றாகும். பேரிடர் மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் அவர்களின் குறைந்தபட்ச தேவைக்கான குறைபாடுகளை எதிர்கொள்கின்றனர்.


இந்த முகாமில் சுமார் 600 பேர் தங்கள் குடும்பத்துடன் முகாமில் உள்ளனர்.

அவர்களுக்கு உதவுவதன் ஒரு பகுதியாக,

தோழர்களின் கரம் அறக்கட்டளை அங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு சிற்றுண்டி (Biscuits) வழங்க திட்டமிட்டிருந்தது.


இந்நிலையில், தோழர்களின் கரம் அறக்கட்டளை சார்பாக, தன்னார்வலர்களான திரு. மௌனிஷ் மற்றும் திரு. விஜய் ஆகியோர் சென்னை பெருங்குளத்தூர் அரசுப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரிடர் மீட்பு முகாமிற்குச் சென்று, அங்கு தங்கியுள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு, முறையே வருவாய் அலுவலர் மற்றும் முகாம் பொறுப்பு அதிகாரியின் அனுமதி பெற்று, அவர்கள் மேற்பார்வையுடன் உதவிப்பொருட்களை வழங்கினர்.


இந்நிகழ்வு முறையாக நடக்க, பரவியிருக்கும் பதட்ட சூழ்நிலையிலும் எங்களுக்கு உதவிய இரு தன்னார்வலர்கள் மற்றும் அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கு தோழர்களின் கரம் அறக்கட்டளை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


"உதவி வரைத்தன்று உதவி, உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து - திருக்குறள்"




FOLLOW US ON :

FACEBOOK:https://m.facebook.com/story.php?story_fbid=851194315422588&id=503164933558863

TWITTER:https://www.instagram.com/p/CIGRAmKlBUF/?igshid=2611ffn0d7uc

12 views0 comments

Comentarios


bottom of page