தோழ-க அறக்கட்டளை - தூய்மை தீபாவளி ஏந்தல் நிகழ்வு
31st October 2021 / 31 அக்டோபர் 2021
TKCT planned to commemorate an eco friendly Diwali. Hence team planned to help people with something that makes them happy, otherthan crackers.
Hence TKCT joined with Mr. Joshua, a social activist who have been working on the upliftment of Tribal people of Anaikatti, Coimbatore and involved in the event of distributing sweets and dresses for nearly 25 tribal families in Kandivali Tribal Village, Anaikatti, Coimbatore.
Thus, today (31.10.2021) TKCT Team along with Mr. Joshua and TKCT Advisor Mr. Thirunavukarasu reached the Kandivali village and Distributed sweets to the 25 families residing there and shared many happy moments with them.
We cordially thank Mr. Joshua, for accommodating us in this good endeavours. TKCT does this event as a sign of gratitude to TKCT members who have been supporting the trust in the every possible ways, and thus hope the blessings of the beneficiaries will reach the members anr their families.
"We are serving - Until Smiles Become Omnipresent"
~•~•~•~••~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~••~•~
இவ்வருட தீபாவளி பண்டிகையை தூய்மைவழி கொண்டாடும் நோக்கில், பட்டாசுகளையும் கடந்து நிறைவான மகிழ்வைத் தரும்படியான உதவிகள் வழங்கும் நிகழ்வை ஒருங்கிணைக்க தோழர்களின் கரம் அறக்கட்டளை எண்ணியது.
இந்நிலையில், சமூக செயற்பாட்டாளர் மரியாதைக்குரிய திரு. ஜோஷ்வா ( பழங்குடியின மக்கள் வாழ்வாதார மேம்பாட்டு செயற்பாட்டாளர் - ஆனைக்கட்டி கிராமங்கள்) அவர்களுடன் இணைந்து ஆணைக்கட்டி பகுதியில் உள்ள கண்டிவழி எனும் பழங்குடி கிராமத்திலுள்ள 25 குடும்பங்களுக்கு இனிப்புகள் மற்றும் உடைகள் வழங்கும் நிகழ்வை ஒழுங்கு செய்தது.
இதை தொடர்ந்து இன்று (31.10.2021) தோழர்களின் கரம் அறக்கட்டளை ஆலோசகர் திரு. திருநாவுக்கரசு மற்றும் அறக்கட்டளை குழு, திரு. ஜோஷ்வா அவர்களுடன் அக்கிராமத்தை அடைந்து, அங்குள்ள 25 குடும்பகளுக்கு தோழ-க அறக்கட்டளை சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நல்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சமூக செயற்பாட்டாளர் திரு. ஜோஷ்வா அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழ-க அறக்கட்டளையில் உறுப்பினராய் இருந்து, அறக்கட்டளைக்கு பங்களிப்பும் உதவியும் அளித்து வந்தவர்களுக்கு நன்றி படைக்கும் நோக்கில் இந்நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. இத்தருணத்தில் தோழ-க அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
புவி எங்கும் புன்னகை படரும்வரை - தொடரும் சேவையில் தோழ-க அறக்கட்டளை
Comments