top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT - FOOD DISTRIBUTION AND MUSICAL CONCERT FOR SPECIAL CHILDREN


19th February 2023 / பிப்ரவரி 19, 2023


TKCT have planned to organise an event to the special children to provide them food and spend some valuable moment with them. Thus TKCT chose Star Special School, a school for special children at Ondipudur, Coimbatore and have planned to provide food and arrange a musical concert for the inmates of nearly 60 special children over there.


Thus, the TKCT team of ten members have reached the school on 19th February and had some valuable time with them by playing games, interacting with everyone and distributing chocolates and sweets.


TKCT have also arranged a musical concert by Hybrid Barrs Musical Band, Coimbatore. The children were so excited for the songs played and all have started dancing for the songs sung.


After the concert, the children were provided with Lunch that was arranged by TKCT.


TKCT was able to have a quality time with all the children and so happy to entertain them and give them food for an hour.


TKCT wholeheartedly thanks the Hybrid Barrs Musical Band team for coming forward to join the noble cause.


The event was coordinated and carried forward by TKCT Chief Executive Mr. Shyamjith and team of executives and members.


•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•


தோழர்களின் கரம் அறக்கட்டளை சார்பில், பிப்ரவரி மாத நிகழ்வாக சிறப்பு குழந்தைகளுக்கான உதவிப்பணி மேற்கொள்ள எண்ணியது. இதன் விளைவாக கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள ஸ்டார் சிறப்புப் பள்ளியைத் ( Star Special School) தேர்ந்தெடுத்து, அங்குள்ள சுமார் 60 சிறப்புக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கிடவும், அவர்களுக்கு இசை நிகழ்ச்சி அமைத்து, அவர்களோடு நேரம் செலவிடவும் எண்ணியது.


எனவே, தோழ-க அறக்கட்டளை சார்பில் சுமார் பத்து பேர் கொண்ட குழு பிப்ரவரி 19 அன்று, ஸ்டார் சிறப்புப் பள்ளியை அடைந்தனர். அங்குள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடல், விளையாட்டு போன்ற நிகழ்வுகளை ஒழுங்குசெய்து அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.


தோழ-க அறக்கட்டளை ஏற்பாடு செய்த கோவையிலுள்ள ஹைபிரிட் பார்ஸ் இசைக் குழு (Hybrid Barrs Musical Band) அங்கு வருகை தந்து இசை நிகழ்ச்சியை நடத்தினர். அதில் குழந்தைகள் மிகவும் உற்சாகம் அடைந்து அவர்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தனர்.


மேலும் தோழ-க அறக்கட்டளை மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட உணவு வழங்கப்பட்டது.


ஒருநாள் முழுமையும் அக்குழந்தைகளோடு நேரம் செலவிடவும், விளையாடவும் அவர்களோடு கலந்துரையாடி மகிழவும் இந்த நிகழ்வு நல்ல வாய்ப்பாக அமைந்ததில் தோழ-க அறக்கட்டளை நிறைவு கொள்கிறது.


இக்கணத்தில், தோழ-க அறக்கட்டளையோடு இணைய முன்வந்த ஹப்ரிட் பார்ஸ் இசைக்குழுவிற்கு தோழ-க அறக்கட்டளை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


இந்நிகழ்வு தோழ-க அறக்கட்டளை தலைமை நிர்வாகி நண்பர். ஷயாம்ஜித் மற்றும் ஏனையர்களால் தலைமையேற்று ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.



45 views0 comments

留言


bottom of page