top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT Diwali Celebration - Paguththu Unn


23rd October 2022 / அக்டோபர் 23, 2022


Unlike the usual Diwali celebration, Thozhargalin Karam Charitable Trust has planned to commemorate Diwali in a productive and impactful way. As a result of this, TKCT took initiative to celebrate Diwali by cooking food and distributing to the tribal people in the Anaikatti Tribal villages, under TKCT's Paguththu Unn Initiative.


Hence on 23rd October, the TKCT team of 20 volunteers reached Kandivali village with all cooking equipment, groceries and distribution stationary. The team cooked delicious food in the village premises and distributed it to nearly 220 people which includes 130 children and 90 elders.


Children were also conducted with many games and winners were given prizes.


It created a wonderful aura among the villagers as well as to the TKCT team. Beneficiaries were completely satisfied with the help done by TKCT.


TKCT wholeheartedly thanks Mr. Joshua, the Social Activist in Anaikati Tribal Village region, for helping all the way to take this event to the needy.


TKCT shows gratitude to the Executive team, members and volunteers for contributing and supporting the endeavour.


By this celebration, this year Diwali turned out to be a memorable endeavour.

~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~


தோழர்களின் கரம் அறக்கட்டளை, இந்த வருட தீபாவளியை மற்றவருக்கு பயனுள்ளதாக கொண்டாட எண்ணியது. இதன் விளைவாக, தோழ-க அறக்கட்டளையின் பகுத்து உண் முன்னெடுப்பின் கீழ், கோவை ஆனைக்கட்டி பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு, உணவு சமைத்து, வழங்கிட முன்வந்தது.


எனவே, அக்டோபர் 23, ஞாயிறு அன்று, தோழ - க அறக்கட்டளை சார்பில் 20 தன்னார்வலர்கள் ஆனைக்கட்டியில் உள்ள கண்டிவழி எனும் கிராமத்திற்கு சமையல் பாத்திரங்கள், மளிகை பொருட்கள் மற்றும் மற்ற உபகரணங்களுடன் சென்றடைந்தனர்.


அங்கு கிராமப் பகுதியிலேயே உணவு சமைத்து சுமார் 220 கிராம மக்களுக்கு உணவு வழங்கினர். இதில் 130 குழந்தைகள் மற்றும் 90 பெரியவர்கள் உள்ளடங்குவர்.


குழந்தைகளுக்காக விளையாட்டுகளும் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வு, கிராம மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. உதவி பெற்றவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.


இந்நிகழ்வு நல்ல முறையில் நடக்க மிகவும் உதவியாக இருந்த சமூக செயற்பாட்டாளர் திரு. ஜோஷ்வா அவர்களுக்கு, தோழ-க அறக்கட்டளை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


மேலும் இந்த நிகழ்விற்கு நன்கொடை மூலமும் பங்கேற்பு மூலம் ஆதரவு வழங்கிய அறக்கட்டளையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு, அறக்கட்டளை நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.


இந்த வருடத்தின் தீபாவளி, இந்நிகழ்வின் மூலம் மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்தது.



44 views0 comments

Comments


bottom of page