top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT CELEBRATES CHRISTMAS IN ORPHANAGE / தோழர்களின் கரம் அறக்கட்டளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம


GIFT DISTRIBUTION AND FOOD PROVISION/ கிறிஸ்துமஸ் பரிசு மற்றும் மதிய உணவு வழங்கல்


24th December 2020 / 24 டிசம்பர் 2020


On the occasion of Christmas, Thozhargalin Karam Charitable Trust had taken initiative to Celebrate it in an Orphanage.


For this regard, the team identified Canaan Orphanage, near G. V. Residency, Peelamedu, Coimbatore, which consists of nearly 25 members which includes children, teen and some college pursuing students.


The team had distributed them gift boxes which consisted of Stationery, Notebooks, Slippers, Books, Savings pot, water bottle and a special gift and some playing kits.


Our Trustee Mr. K. J. Nikesh, who carried himself as the Santa Clause, had helped providing gifts and entertaining children.


They were then provided with lunch, by the trust.


The team had a worthy time with the inmates which included joyful moments, gift unboxing, songs, dance and celebration.


The members of the TKCT Mr. Vignesh Anish, Mr. Subbu Rathina Vel, Mr. Kishore Kumar, Ms. Haripriya, Mr. Abdur Rahman and Ms. Priyanka had joined the event and carried forward with their whelming support.


The team solemnly thanks everyone who shown their support through their valuable contribution both monetary and in field work.


*Whoever is generous to the poor lends to the Lord - Proverbs (Holy Bible) 19:17*


~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•


தோழர்களின் கரம் அறக்கட்டளை,

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாட முயற்சி மேற்கொண்டது.


இதன் விளைவாக, இவ்வறக்கட்டளை கோவை பீளமேடு, ஜி. வி. ரெசிடென்சிக்கு அருகிலுள்ள கானான் ஆதரவற்றோர் இல்லத்தை அடையாளம் கண்டது. இங்கு குழந்தைகள், பதின் வயதினர் மற்றும் சில கல்லூரி மாணவர்கள் உள்பட கிட்டத்தட்ட 25 ஆதரவற்றோர் உள்ளனர்.


நம் அறக்கட்டளை அங்கு சென்று, அவர்களுக்கு பரிசு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கியது. அதில் காகிதம் முதலிய எழுது பொருள்கள் (ஸ்டேஷனரி), நோட்டுப்புத்தகங்கள் காலணிகள், புத்தகங்கள், உண்டியல், தண்ணீர் குடுவை, ஒரு சிறப்பு பரிசு மற்றும் சில விளையாட்டு கருவிகள் உள்ளடங்கும்.


தோழர்களின் கரம் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் நண்பர். விக்னேஷ் அனிஷ், நண்பர். சுப்பு ரத்தினவேல், நண்பர். கிஷோர் குமார், தோழி. ஹரிப்பிரியா, நண்பர். அப்துர் ரஹ்மான் மற்றும் தோழி. பிரியங்கா ஆகியோர் இந்த நிகழ்வில் சேர்ந்து சிறப்பாய் பங்காற்றினர்.


கிறிஸ்துமஸ் தாத்தாவாக அறக்கட்டளை அறங்காவலர் திரு. கே. ஜே. நிகேஷ், பரிசுகளை வழங்கியும் குழந்தைகளை மகிழ்வித்தும் நிகழ்வை சுவைபட நடத்திச் சென்றார்.


பின்னர் அவர்களுக்கு அறக்கட்டளை சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது.


அவர்களுடன் மகிழ்ச்சியான தருணங்கள், பரிசின் உற்சாகம், பாடல்கள், நடனம் மற்றும் கொண்டாட்டம் போன்றவற்றை இந்நிகழ்வின் மூலம் பெற இயன்றது.


மேலும் இத்தருணத்தில், நன்கொடை மற்றும் களப்பணி ஆகியவற்றில் தங்கள் சீரிய பங்களிப்பின் மூலம் ஆதரவளித்த அனைவருக்கும் அறக்கட்டளை உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறது.


*ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான் - நீதிமொழிகள் 19:17*

46 views0 comments

Comments


bottom of page