top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

TKCT AND SRCAS MIB DEPARTMENT IN FOOD DISTRIBUTION

TKCT AND SRCAS MIB DEPARTMENT IN FOOD DISTRIBUTION 15th August, 2021 On the occasion of 75th Independence Day, The Department of MIB (Masters - International Business) of Sri Ramakrishna College of Arts and Science, Nava India had wished to join with Thozhargalin Karam Charitable Trust and to provide Food for the Homeless and underprivileged people. For this regard, the team had taken initiative to provide food for the people who are staying around Coimbatore Government Hospital region and Thudialur Market region. Today (15-08-2021) The Trust members joined with MIB aspirants of SRCAS and provided 100 food packets for the Homeless people around GH and Thudialur. For GH, TKCT Executive Member Ms. Sandhiya took lead with the team having members Mr. Srinithi, Mr. Bhuvanesh and Mr. Sridhar along with two MIB aspirants and for Thudialur, TKCT Executive Member Mr. Sajith took lead with the team having members Mr. Vigneshkumar, Mr. Venkatesh, Ms. Sivalalithambal and Ms. Mohanapriya along with with MIB aspirants and executed the event a good endeavour. The Trust conveys sincere gratitude for SRCAS MIB Department for having joined with us for this good endeavour in a great day. The Trust wholeheartedly wishes them best for their upcoming activities. "The day when the nation is hunger-free, that is when the real Independence happen" •~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~ தோழ - க அறக்கட்டளை மற்றும் ராமகிருஷ்ணா கல்லூரி பன்னாட்டு வணிகத் துறை இணைந்து உணவு வழங்கல் நிகழ்வு இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி கோவை நவ இந்தியாவிலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பன்னாட்டு வணிகத் துறை (முதுநிலை) தோழர்களின் கரம் அறக்கட்டளையுடன் இணைந்து ஆதரவற்றோர்க்கு உணவு வழங்கும் நிகழ்வை முன்னெடுக்க விரும்பினர். எனவே தோழ - க அறக்கட்டளை, கோவை அரசு மருத்துவமனை மற்றும் துடியலூர் பகுதிகளில் வாழும் சாலையோரத்தில் வாழும் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கிடத் திட்டமிட்டது. இதன் விளைவாக, இன்று (15-08-2021), அறக்கட்டளை உறுப்பினர்கள் மட்டும் துறை மாணவர்கள் இணைந்து, இரு பகுதிகளிலும் சுமார் 100 உணவு பொட்டலங்களை அங்கு வாழும் ஆதரவற்ற மக்களுக்கு வழங்கினர். அரசு மருத்துவமனைப் பகுதியில், அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் தோழி. சந்தியா, தனது அணியான அறக்கட்டளை உறுப்பினர்கள் நண்பர். ஸ்ரீ நிதி, நண்பர். ஸ்ரீதர், நண்பர். புவனேஷ் மற்றும் துறை மாணவர்கள் இருவர் ஆகியோருடனும், துடியலூர் பகுதியில் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் நண்பர். சஜித், தனது அணியான அறக்கட்டளை உறுப்பினர்கள் நண்பர். விக்னேஷ் குமார், நண்பர். வெங்கடேஷ், தோழி. சிவலலிதா, தோழி. மோகனப்ரியா மற்றும் துறை மாணவர்கள் இருவர் ஆகியோருடனும் இணைந்து இந்நிகழ்வை முன்னெடுத்தனர். இத்தருணத்தில் தோழ - க அறக்கட்டளை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பன்னாட்டு வணிகத் துறை (முதுநிலை) சார்ந்தவர்களுக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. "பசிப்பிணியற்றவர்களால் என்று இந்நாடு நிறைந்திருக்கிறதோ, அன்றே இந்நாடு முழு சுதந்திரத்தை சுவாசிக்கும்"



19 views0 comments

ความคิดเห็น


bottom of page