16th October 2021 / 16 அக்டோபர் 2021
On the occasion of the Birth Anniversary of former President Dr. A. P. J. Abdul Kalam, the trust have planned to set up a library for a government school.
Thus, the team identified a Government Primary School in Ramachettypalayam, Perur, in which the students from grade one to grade five are studying. The team decided to donate them a library rack and some books.
Henceforth, the team reached the Perur Union Primary School in Ramachettypalayam today (16.10.2021), and donated them a Library Rack worth Rs. 5,500 and nearly 400 books in Tamil and English which is about education, literature, life and self- development.
In this event, The School Headmistress Mrs. G. Kousalya, Ilanguruthi club member Ms. T. Dharani and the Office bearers, Trustees and members of Thozhargalin Karam Charitable Trust have taken part and installed the library.
"A good book is equal to hundred good friends"
•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
முன்னாள் குடியரசுத் தலைவர் உயர்திரு. ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு ஓர் அரசுப் பள்ளியில் ஒரு நூலகம் அமைத்துத் தர தோழர்களின் கரம் அறக்கட்டளை திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பயிலும் ஒரு பள்ளியை, அறக்கட்டளை தேர்ந்தெடுத்தது. அப்பள்ளிக்கு , புத்தக அலமாரி மற்றும் புத்தகங்கள் வழங்க முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து, இன்று (16.10.2021) இராமசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள பேரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இந்நிகழ்வை ஒழுங்கு செய்து, சுமார் ரூ. 5,500 மதிப்புள்ள புத்தக அலமாரி மற்றும் மாணவர்கள் கல்விக்கும் வாழ்க்கைக்கும் உதவும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சுமார் 400 புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. கௌசல்யா, இளங்குருதி மன்ற உறுப்பினர் தோழி. தாரணி மற்றும் தோழர்களின் கரம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
"நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு" வள்ளுவம் - 783
Comments