தோழர்களின் கரம் அறக்கட்டளையின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கான உதவிப் பணி
December 25, 2021 / திசம்பர் 25, 2021
On the occasion of Christmas, Thozhargalin Karam Charitable Trust planned to help any benificiery who is undergoing treatment for Cancer.
Thus, the team identified a child of 10 years old, who is residing at thondamuthur, is undergoing cancer treatment. The parents are facing hardship financially to meet the child's medical expenditure. Hence the team planned to help them by rendering cash donation.
For the regard, our team visited their house, and handed over the cash amount of Rs. 5000 /- ( Five Thousand Rupees only ) to the child's mother, for their upcoming medical expenses.
The TKCT Founder Mr. Bharaniidharan and TKCT Executive Mr. Abdur Rahman carried forward the event and did the needful.
We thank all the wonderful hearts who contributed and supported this event.
"Learn what you are good at and expedite it in service of others"
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
தோழர்களின் கரம் அறக்கட்டளை கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஏதேனும் புற்றுநோய் சிகிச்சை பெற்று வரும் பயனாளிக்கு உதவ நினைத்தது.
அதனையடுத்து, கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தைக்கு தமது சிகிச்சைக்கு உதவும் விதமாக பொருளுதவி அளிக்க முன்வந்தது.
இதன் விளைவாக, அறக்கட்டளைக் குழு அவர்கள் இல்லம் சென்று, அக்குழந்தையின் பெற்றோரிடம் ரூ.5000 /- (ஐந்தாயிரம் ரூபாய் மட்டும்) உதவித்தொகையாக வழங்கினர்.
இந்நிகழ்வில் நமது அறக்கட்டளையின் நிறுவனர் நண்பர் பரணிதரன் மற்றும் நிர்வாகி நண்பர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்து
உதவித்தொகையை வழங்கினர்.
இந்நிகழ்விற்கு, தங்கள் பங்களிப்பின் மூலம் ஆதரவளித்த அனைவருக்கும் அறக்கட்டளை மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறது.
"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்"
- வள்ளுவம் 104
Comments