top of page
Search
  • Writer's pictureAdmin | TKCT

FOOD AND BLANKET DISTRIBUTION TO OLDAGE HOME


15th August, 2021 On the occasion of 75th Indian Independence Day, Thozhargalin Karam Charitable Trust have taken initiative to help an oldage home by providing their needs. For that regard, The Trust identified a home called Magilchi Karunai Illam in tirupur, which helps the homeless people to rehabitat their living, through providing them food and stay in the home. Nearly 45 Senior Citizens are staying in this home who are cared by 5 staffs. They were in urgent requirement of Blankets and Rice. Hence, TKCT took step forward to buy them the needful. The Trust bought them 50 blankets and 2 Bags of 25 Kg Rice also sponsored them their Lunch for this day. TKCT Trustee Mr. Siranjeevi lead the event and Trust members Mr. Subbu rathinavel, Mr. Shyamjith and Mr. Ramesh had volunteered the event. We extend our sincere gratitude to the members and friends who contributed for the event. "The real independence is when everyone can smile without scars" •~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~• தோழ-க அறக்கட்டளை - உணவு மற்றும் போர்வை வழங்கும் நிகழ்வு இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி, தோழர்களின் கரம் அறக்கட்டளை, ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவும் நிகழ்வை முன்னெடுத்தது. இதையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மகிழ்ச்சி கருணை இல்லத்திற்கு உதவிட முன்வந்தது. இவ்வில்லம் ஆதரவற்ற மற்றும் தங்குமிடம் இன்றி விடப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் நோக்குடன் சுமார் 45 ஆதரவற்றோர் மற்றும் அவர்களை பராமரிக்க 5 பேர் என மொத்தம் 50 பேருடன் செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு போர்வைகள் மற்றும் அரிசி போன்றவை உடனடி தேவைகளாக இருந்தது. இதனையடுத்து, தோழ-க அறக்கட்டளை இன்று (15-08-2021) அவர்களுக்கு 50 போர்வைகள் மற்றும் 25 கி அரிசி இரண்டு சிப்பம் வழங்கியது. மேலும் அவர்களுக்கு மதிய உணவும் தோழ-க அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை அறக்கட்டளை அறங்காவலர் நண்பர். சிரஞ்சீவி வழிநடத்த, அறக்கட்டளை உறுப்பினர்கள் நண்பர். சுப்பு ரத்தினவேல், நண்பர். ஷ்யாம்ஜித் மற்றும் நண்பர். ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, நிகழ்வு நிறைவுற பெரும்பங்காற்றினர். இத்தருணத்தில், தோழ-க அறக்கட்டளை, உதவிய உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. "வலிகளற்ற இனிமையான புன்னகையில் தான் உண்மையான சுதந்திரம் காணப்படுகிறது "

15 views0 comments

Комментарии


bottom of page